வியாழன், 4 ஏப்ரல், 2013

அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை

கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :
================================================

இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது .

அதாவது வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் , அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம் செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது ,

அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு

“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்றும்

“அரியகுல மழுவெறி ராயர் ”

எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் .

பிறகு பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .

புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
==============================

பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு

“மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு

தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
=====================================
அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர் .

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
=====================================
பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
============================

இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்று குறிப்பிட்டுள்ளது .

ஆதாரம் :
========
நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43

3 கருத்துகள்:

அன்பரசு சொன்னது…

மன்னன்,மதிப்பனை கொலை செய்தவர்கள் கன்னட வடுகர்கள். வன்னியர் வடுகரா

Unknown சொன்னது…

தவறான கதை

Unknown சொன்னது…

மன்னன் மதிப்பன் இருவரும் குலசேகரப் பாண்டியனுக்கு நெருக்கமான வீரர்கள்