வணக்கம் நண்பர்களே..!
புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம்
கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில்
வளர்ந்துகொண்டே வந்தது. கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு,
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே
இல்லை..
வி.ஏ. சிவ அய்யாதுரை |
அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும்
மின்னஞ்சல் சேவையும் ஒன்று. இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு
நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன.
தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு
பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே
ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம்
அதிகரித்திருக்கிறது.
இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுப்பிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்பணித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா?
ஆம் நண்பர்களே..! மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே!
V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர்.
மின்னஞ்சலைக் கண்டுபிடித்தபோது இவருக்கு பதினான்கு வயது மட்டுமே..
ஆச்சர்யமாக இருக்கிறதா? மிகவும் இளவயதிலேயே இச்சாதனையை இவர்
நிகழ்த்தியிருக்கிறார்.
பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு
அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம்
நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற
முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு
கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை.
மாணவப்பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற
நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம்
கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் இன்னொவேஷன்
கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை
ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும்
அறிவித்திருக்கிறார்.
இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான சிவா அய்யாதுரை
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட.
அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்து சிறப்பித்து பாராட்டியிருக்கிறது.
இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும்,
திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என
நினைக்கிறேன்.
இன்று அனைவராலும் பயன்படுத்துக்கூடிய, மிகச்சிறந்த என்று அழியாத ஒரு
கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி, உலக மக்களுக்கு வழங்கிய திரு. சிவா அய்யாத்துரை
அவர்களை தங்கம்பழனி வலைத்தளத்தின் சார்பாக வாழ்த்தி மகிழ்வோம்..
நன்றி நண்பர்களே…!
இவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட தகவல்களை கருத்துரைகளின் வாயிலாக நீங்களும் தெரிவிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக