சனி, 20 ஏப்ரல், 2013

சமூகநீதிப் போராளிகளின் வீரத் தியாகம் - 17 செப்டம்பர் 1987 - MBC

1. தியாகி பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள பார்ப்பனப்பட்டுக் கிராமத்தை சேர்ந்த தியாகி. சாலை மறியலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவரின் வயது 55.

2. தியாகி சித்தணி ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 க்கும் கீழ். காலவல் துறையினர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று வீரமரணம் அடைந்தார். திருமணமானவர்.

3. தியாகி ஒரத்தூர் செகநாதன்
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணமானவர். சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.


4. தியாகி முண்டியம்பாக்கம் சிங்காரவேலு
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணாமானவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 43.

5. தியாகி கயத்தூர் முனியன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமானவர். பார்ப்பனப்பட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வைக் கேள்விப்பட்டு, ஊர்வலமாக தலைமையேற்று சென்றவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 27. அவரது மனைவி வேதவல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

6. தியாகி கயத்தூர் முத்து

விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

7. தியாகி கொழப்பலூர் முனுசாமிக் கவுண்டர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்.சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சென்னை மத்திய சிறையிலேயே வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 45. திருமணமானவர்.

8. தியாகி கோலியனூர் விநாயகம்.
விழுப்புரம் மாவட்டம் மிளகாய்க் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.

9. தியாகி கோலியனூர் கோவிந்தன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் விநாயகம், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர். அப்போது அவருக்கு வயது 35.

10. தியாகி தொடர்ந்தனூர்  வேலு.

செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம் ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.  திருமணமானவர்.

கருத்துகள் இல்லை: