அரசியல் கட்சிகள் முதல் அனைத்து இயக்கங்களும் அவரை இன்று மறந்து விட்டனர் .
-------------------
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் ..
1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசர் , வன்னியர்களுக்கு இரண்டு தொகுதி மட்டுமே தருவேன் என்று வன்னியர்களை ஏமாற்றிய போது , அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார் ,கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார்.
1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராசர் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது.
பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது - எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்து தனது ஆதரவை தந்து காமராசரை முதல்வர் ஆக்கினார் .
--------------------
அவரின் நினைவு நாளில் அவரை வணங்குவோம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக