வியாழன், 16 மே, 2013

தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது,

Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)


தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.





வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ் கடைசங்கத்தில் அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!?!?

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக்கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!

பா.ம.க வுக்கு தடை கோரும் தகுதி தமிழக,இந்திய கட்சிகளுக்கு இருக்கிறதா ??

பா.ம.க வுக்கு தடை கோரும் தகுதி தமிழக,இந்திய கட்சிகளுக்கு இருக்கிறதா ?? கேரளாவில் அரசியல் எதிரிகளை கொலை செய்தது மார்க்ஸிட் கம்யுநிஸ்ட் கட்சி. மேற்கு வங்கத்தில் தலித்துகளை கொலை செய்தது மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ! இந்திராகாந்தி கொலைக்கு காரணமாக நாடு முழுவதும் பத்தாயிரம் சீக்கியர்களை கொலை செய்தது காங்கிரஸ் கட்சி! மூன்று மாணவிகளை பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தது அண்ணா தி.மு.க கட்சி! 1992-கும்பகோணம் ­-மகாமகத்தில் 48 உயிர் பலிக்கு காரணமாக இருந்தது அண்ணா தி.மு.க கட்சி. குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்தது பாரதிய ஜனதா கட்சி. தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் அப்பாவி இரண்டுபேரை எரித்து கொலை செய்தது தி.மு.க இவர்களெல்லாம் சட்டமன்றத்திலும ­், நாடாளுமன்றத்தில ­ும் ஆட்சி செய்யும் பொழுது. இரண்டு வன்னிய உயிர்களை இழந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு தடையா ??

மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன?

மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? தொலைக்காட்சியில் எனது நேர்காணல்-காணொலி! மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான வன்னியர்கள் அடித்தும் வெட்டியும் காயப்படுத்தப்பட்டனர். வன்னியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயப் படுத்தப்பட்டுள்ளனர். வன்னியர்கள் வந்த ஐநூற்றுக்கும்மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஒரு நடவடிக்கையும்இல்லை. ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட கலவரம் குறித்து நீதிவிசாரணை கேட்டுப்போராடிய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் காவல்துறையால் அலைகழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மரக்காணத்தில் கொல்லப்பட்ட வன்னியர்கள் விபத்தில் இறந்தார்கள் என்று சாதித்த காவல்துறையினர் , பிரேத பரிசோதனைஅறிக்கைக்கு பின்னர் படு கொலைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்

பாமக தொண்டர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை:

பாமக தொண்டர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை: தமிழக அரசுக்கு நோட்டீஸ் "மரக்காணம் கலவரத்தின்போது பா.ம.க. தொண்டர் செல்வராஜ் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பி.செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவுக்காக எங்கள் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில் சென்றோம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மதுரா கழிகுப்பம் கிராமத்தை அடைந்தபோது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு எங்கள் வாகனம் மீது தாக்கியது. நாங்கள் அங்கிருந்துதப்பி விட்டோம். எனது சகோதரர் செல்வராஜ் அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கூறியபடி எனது தம்பியை அந்தக் கும்பல் கொன்றுவிட்டதாக அன்று இரவு எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனது சகோதரர் விபத்தினால் உயிரிழக்கவில்லை. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும் எனது சகோதரர் விபத்தினால் உயிரிழந்ததாக காவல் துறையும், ஊடகங்களும் கூறி வருகின்றன. தற்போதைய சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸôர் விசாரணை நடத்தினால் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். ஆகவே, எனது சகோதரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் செல்வம் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்."