புதன், 9 ஜனவரி, 2013

ருத்திர வன்னியன் நாடகம்

ருத்திர வன்னியன் வருகின்ற பாடல்


வளரும் மதியை யொற்றி வொளிவில் யதிகம் பெற்ற
வன்னிய ராசன் வந்தேன்
புசபல சவுரிய அதிபல தீரன்
வன்னியராசன் வாறேன்
வளமை பெருகும் சம்பு மாமுனி வேள்வியில்
(ச)வந்த வீரனும் மந்தமாரனும்
பிந்திடும்படி சுந்திரத் தொளி(வள)

கெண்ட நயன மாதர் கண்டு மதிமயங்க
கிரீட கண்டலம் சொலிக்கவே
நவமணிகள் யிழைத்திட்ட
கிரீட குண்டலம் சொலிக்கவெ
அண்டதமரரெல்லாம் நின்று துதிகள் செய்ய
(ச)ஆரகோயூர் கடகம் யிலங்கிட
பாரும் மெச்சிட வீரர்நெருங்கிட(வள)

மங்கள கோசுடம் பாட நங்கையர் யெதிராட
மாதர் கவரி வீசவே இருபாலும்வுச்சித
மாதர் கவரிவீசவே
துங்கபிரகாசமுள்ள சுவாலசுவம் மீதிலேறி
(சு)துந்தமிகளும் விந்தையாய் பாடிட
நெர்துயரக்காரர்கள் சிந்தையும் வாடிட(வள)

லட்சம் கோடிவீரர் ராணுவர் நெருங்கிட
நல்புலிக்கொடி பறக்கவே அதிகெடிபெறவடிவுள்ள
நற்புலிக்கொடி பற்க்கவே
பாசமுடனே ஈன்ற பார்வதிபாதம் காண
(சு)பாரசிலைகணை வீரத்துடணிதோ
அகோரத்துடனே அனல் மீறிபெருகிட(வள)

கருத்துகள் இல்லை: